6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் அட்டகாசமான விவோ வி11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ வி11 ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்ப 25எம்பி செல்பீ கேமரா செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது
விவோ நிறுவனம் தற்சமயம் விவோ வி11 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் விரைவில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விவோ வி11 ஸ்மார்ட்போன் மாடல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதற்கு முன்பு அறிமுகம் செய்த விவோ நெக்ஸ், விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.
விவோ வி11 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 ஒ 2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிஸ்பிளே என்ற அம்சத்தைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும் விவோ வி11 ஸ்மார்ட்போன் மாடல்.
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் பின்பு ஆண்ட்ராயடு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ வி11 ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்ப 25எம்பி செல்பீ கேமரா செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் விவோ வி11 ஸ்மார்ட்போன் விலை சார்ந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications