விவோ யு20 ஸ்மார்ட்போன் இன்று மத்திய 12 மணி முதல் விற்பனை! சலுகைகளும் உண்டு!

|

விவோ நிறுவனத்தின் புதிய விவோ யு 20 ஸ்மார்ட்போன், அமேசான் இந்தியா மற்றும் விவோ இந்தியா இ-ஷாப்பில் ஒரே நேரத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. விவோ யு 20 கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் தற்பொழுது இரண்டாவது முறையாக ஆன்லைன் தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

விவோ யு 20

விவோ யு 20

அமேசான் மற்றும் விவோ இ-ஷாப்பில் இன்று மதியம் 12 மணி முதல் புதிய விவோ யு 20 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்குகிறது. இந்த புதிய விவோ யு 20 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விவோ யு 20

புதிய விவோ யு 20 ஸ்மார்ட்போனின், 4 ஜிபி/64 ஜிபி வேரியண்டி இந்தியாவில் ரூ.10,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், புதிய விவோ யு 20 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி/64 ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ.11,990 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த விவோ யு 20 ஸ்மார்ட்போன், ரேசிங் பிளாக் மற்றும் பிளேஸ் ப்ளூ என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

வானிலை மாற்றம்!பேராபத்தை விளைவிக்கும் எல்நினோ.!வானிலை மாற்றம்!பேராபத்தை விளைவிக்கும் எல்நினோ.!

சலுகை

விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, அமேசான் தளத்தில் இஎம்ஐ விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. 10 சதவீதம் கேஷ்பேக் ரூ.500 எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகளுடன், எச்.எஸ்.பி.சி கேஷ்பேக் கார்டுடன் 5 சதவீதம் உடனடி தள்ளுபடி. விவோ இந்தியா இ-ஷாப் மூலம் எக்ஸ்சேஞ் தள்ளுபடி, ஆறு மாதங்கள் வரை விலை இல்லாத இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் ரூ.6,000 மதிப்பிலான ரிலையன்ஸ் ஜியோ சந்தா.

ஆதார் ஆப்-ஐ உடனே டெலீட் செய்துவிட்டு புதிய செயலியை டவுன்லோட் செய்யுங்கள்! காரணம் என்ன தெரியுமா?ஆதார் ஆப்-ஐ உடனே டெலீட் செய்துவிட்டு புதிய செயலியை டவுன்லோட் செய்யுங்கள்! காரணம் என்ன தெரியுமா?

விவோ யு 20 சிறப்பம்சங்கள்

விவோ யு 20 சிறப்பம்சங்கள்

  • 6.53' இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
  • வாட்டர் ட்ராப் நாட்ச்
  • ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
  • ட்ரிபிள் கேமரா செட்டப்
  • 16 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
  • 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
  • 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ கேமரா
  • 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
  • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 5,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Vivo U20 to Go on Sale Today via Amazon, Vivo.com at 12 Noon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X