புதிய சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வரும் விவோ U20 ஸ்மார்ட்போன்.!
விவோ நிறுவனத்தின் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் மாடல் இன்று மீண்டும் அமேசான் மற்றும் விவோ வலைதளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

விவோ U20 விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U20 மாடல் விலை ரூ.10,990-ஆக உள்ளது, அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U20 மாடல் விலை ரூ.11,990-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும்,பின்பு ஜியோ நிறுவனம் சார்பில் இந்த சாதனத்திற்கு குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அருமையான டிஸ்பிளே வசதி
விவோ U20 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல்
திர்மானம் மற்றும் 90.3 சதவிகிதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 480 நிட்ஸ் அளவிலான ப்ரைட்னஸ் போன்றவைகளையும்
வழங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் திரை சிறந்த பாதுகாப்பு அம்சம் மற்றும் கேமிங், வீடியோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தகுந்தபடி வெளிவந்துள்ளது.

மென்பொருள் வசதி
இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி விவோ U20 ஸ்மார்ட்போனில்ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியை விட25சதவிகிதம் அதிக செயல்திறனை வழங்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 9 கஸ்டம்ஸ்கின் கொண்டு இயங்குகிறது.

சேமிப்பு வசதி
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆனது ரேசிங் பிளாக் மற்றும் பிளேஸ் ப்ளூ என்கிறஇரண்டு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.

கேமரா அம்சம்
விவோ U20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா எனமொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
விவோ U20 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், பீடோ, க்ளோனாஸ் மற்றும் கலிலியோ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








