நவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் வரும் நவம்பர் 22-ம் தேதி தனது புதிய விவோ U20 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது அருமையான டிஸ்பிளே அம்சம் மற்றும் சிறந்த மென்பொருள் வசதியுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆன்லைனில் வெளிவந்த விவோ ரு20 ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ U20 ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவோ U20 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் என்றும் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ U20 ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெனிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்நிறுவனம். மேலும் இதற்கு முன்பு வெளிவந்த விவோ U10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ U10 ஸ்மார்ட்போனில் 6.35-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு 1544 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ U10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ U10 ஸ்மார்ட்போன் மாடல் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் 18வாட் பாஸ்ட் சார்ஜர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை,மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications