காசுக்கு தகுந்த பணியாரம்: தரமான விவோ U20 ஸ்மார்ட்போன்: விற்பனை தேதி மற்றும் முழுவிபரம்.!

|

விவோ நிறுவனம் கடந்த வாரம் புதிய விவோ U20 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக மலிவு விலையில் கேமரா, மென்பொருள் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 28-ம் தேதி

நவம்பர் 28-ம் தேதி

விவோ U20 ஸ்மார்ட்போன் ஆனது வரும் நவம்பர் 28-ம் தேதி 12மணி அளவில் அமேசான் மற்றும் விவோ இ-ஷாப் வழியேவிற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் குறிப்பிட்ட சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் என
அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருமையான டிஸ்பிளே வசதி

அருமையான டிஸ்பிளே வசதி

விவோ U20 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340பிக்சல் திர்மானம் மற்றும் 90.3 சதவிகிதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 480 நிட்ஸ் அளவிலான ப்ரைட்னஸ்போன்றவைகளையும் வழங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் திரை சிறந்த பாதுகாப்பு அம்சம் மற்றும் கேமிங், வீடியோஉள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தகுந்தபடி வெளிவந்துள்ளது.

நீங்கள் மிகவும் எதிர்பார்த்த சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!நீங்கள் மிகவும் எதிர்பார்த்த சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

மென்பொருள் வசதி

மென்பொருள் வசதி

இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி விவோ U20 ஸ்மார்ட்போனில்ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியைவிட 25சதவிகிதம் அதிக செயல்திறனை வழங்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 9 கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது.

 சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆனது ரேசிங் பிளாக் மற்றும் பிளேஸ் ப்ளூ என்கிற இரண்டு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

விவோ U20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமராஎன மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

விவோ U20 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன்இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், பீடோ, க்ளோனாஸ் மற்றும் கலிலியோபோன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

காசுக்கு தகுந்த பணியாரம்

காசுக்கு தகுந்த பணியாரம்

காசுக்குத் தகுந்த பணியாரம் என்று கிராமங்களில் சொல்வது போல் இந்த சாதனம் சிறந்த அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும். அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U20 மாடல் விலை ரூ.10,990-ஆக உள்ளது, அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U20 மாடல் விலை ரூ.11,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo U20 First Sale Starts on November 28 at 12PM: Price in India, Offers, Specs and More Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X