"இன்று போய் 28 ஆம் தேதி வாங்க": விவோ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

|

விவோ யு 20 மொபைல் போன் இந்தியாவில் இன்று மதியம் 12 மணிமுதல் அமேசான் மற்றும் விவோ இ ஸ்டோரில் விற்பனைக்கு வருவதாக அறிவித்திருந்தது. ஆனால் திடீரென இதன் விற்பனை தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. விவோ வாடிக்கையாளர்கள் இந்த போன் விற்பனைக்கு மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த மொபைல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

மொபைல் வடிவமைப்பு

மொபைல் வடிவமைப்பு

விவோ யு 20 பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பையும் பின்புற பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியையும் கொண்டுள்ளது. விவோ யு 10-ன் அடுத்தக்கட்ட மொபைலாக விவோ யு 20 மொபைல் அறிமுகம் செய்யப்பட இருந்தது.

விவோ யு 10 அடிப்படையாக கொண்டதா?

விவோ யு 10 அடிப்படையாக கொண்டதா?

விவோ யு 10 மொபைல் போனானது 3 ஜிபி ரேம் பவருடனும், 32 ஜிபி இன்டர்னல் வசதியுடனும் அரிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.8,990 ஆக விற்பனை செய்யப்பட்டது. மேலும் 3 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட விவோ யு 10 மொபைல் ரூ.9,990 ஆக அறிமுகம் செய்யப்பட்டது. டாப்-ஆஃப் லைன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்ட விவோ போன் ரூ.10,990 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

விவோ யு 20 அம்சங்கள்

விவோ யு 20 அம்சங்கள்

விவோ யு 20-ன் டீசர்களை பொறுத்தவரை, விவோ யு 20 போனானது, 6.53 இன்ச் டிஸ்ப்ளே வசதியும், வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச், 90.3 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் வைட்வைன் எல் 1 சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

பேட்டரி குறித்த விவரம்

பேட்டரி குறித்த விவரம்

இந்த தொலைபேசி ஸ்னாப்டிராகன் 675 SoC ஆல் இயக்கப்படுகிறது. 5000 எம் ஏ ஹெச் பேட்டரி வசதி கொண்ட இந்த போனுக்கு 18 வாட்ஸ் ஃபாஸ்ட்ட சார்ஜிங் வசதி இணைக்கப்பட்டுள்ளது. விவோ யு 20 பேட்டரி ஆயுள் 273 மணிநேரமும், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் 21 மணிநேரமும், பேஸ்புக் பயன்பாட்டில் 17 மணிநேரமும், யூடியூப் பயன்பாட்டில் 11 மணிநேரமும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா மெகாபிக்சல் விவரம்

கேமரா மெகாபிக்சல் விவரம்

விவோ யு 3-இன் மறுப்பதிப்பாக விவோ யு 20 உள்ளது என தகவல்கள் பரவினாலும், விவோ நிறுவனம் அதுகுறித்து விளக்கமளிக்கவில்லை. அதற்கேற்ப விவோ யு 3-ன் அம்சங்கள் அனைத்தும் விவோ யு 20-க்கு பொருந்துகின்றன. இந்த யூகம் சரியாக இருந்தால் மூன்று பின்புற கேமரா அமைப்பு எஃப் / 1.78 துளை கொண்ட 16 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டிருக்கும், இது 8 மெகாபிக்சல் மற்றும் 2.2 மெகா பிக்சல் கேமரா கொண்டிருக்கும்.

வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

இந்த போன் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று அறிவித்திருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து விவோ நிறுவனம் ஏதும் விளக்கமளிக்காத காரணத்தால் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
vivo u20 first sale date postponed in india

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X