Just In
- 11 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- 11 hrs ago
44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!
- 12 hrs ago
விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!
- 13 hrs ago
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- News
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : 11.78 லட்சம் பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர் - இது அவசியம்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.17,990-விலையில் 8ஜிபி ரேம் உடன் விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் விவோ U20 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த 8ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.17,990-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம்
ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி
ஏற்கனவே 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U20 ஸ்மார்ட்போன் ரூ.10,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U20 மாடல் ரூ.11,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
விவோ U20 ஸ்மார்ட்போன் மாடல்வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் 90.3 சதவிகிதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 480 நிட்ஸ் அளவிலான ப்ரைட்னஸ் போன்றவைகளையும் வழங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் திரை சிறந்த பாதுகாப்பு அம்சம் மற்றும் கேமிங், வீடியோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தகுந்தபடி வெளிவந்துள்ளது.
அதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது?

மென்பொருள் வசதி
இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி விவோ U20 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியை விட 25சதவிகிதம் அதிக செயல்திறனை வழங்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 9 கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது.

சேமிப்பு வசதி
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி /8ஜிபிரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆனது ரேசிங் பிளாக் மற்றும் பிளேஸ் ப்ளூ என்கிற
இரண்டு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.
குறிப்பிட்ட சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வந்த ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்.!

கேமரா அம்சம்
விவோ U20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா எனமொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
விவோ U20 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், பீடோ, க்ளோனாஸ் மற்றும் கலிலியோ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999