6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ யூ1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
விவோ நிறுவனம் தற்சமயம் விவோ யூ1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் தற்சமயம் விவோ யூ1 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ யூ1 ஸ்மார்ட்போன் மாடல் வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

டிஸ்பிளே:
விவோ யூ1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:
இக்கருவி 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
விவோ யூ1 ஸ்மார்ட்போன் 13எம்பி+8எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அமசங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஃபன்டச் ஒஎஸ் 4.5 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி-விலை
விவோ யூ1 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.8,400-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications