மார்ச் 31 ஆம் உறுதி., விவோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
விவோ நிறுவனத்தின் விவோ எஸ்6 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுக தேதியை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. விவோ நிறுவனம் அண்மையில் விவோ வி 19 ஸ்மார்ட் போன் அறிமுகத் தேதியை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது எஸ் 6 போன் அறிமுகத்தையும் உறுதி செய்துள்ளது.

முதலில் விவோ வி19 ஸ்மார்ட் போன் குறித்து பார்க்கலாம்
2340 x 1080பிக்சல் திர்மானம் விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2340 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

32எம்பி செல்பீ கேமரா விவோ வி19
ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

256ஜிபி உள்ளடக்க மெமரி விவோ வி19
ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு அல்லது 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 26 ஆம் தேதி அறிமுகமாகும் விவோ வி19
இந்த போனானது கடந்த மாதம் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்ததையடுத்து தற்போது விவோ வி19 போன் இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதம் 26 ஆம் தேதி இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.

விவோ எஸ்6 மொபைல் குறித்து பார்க்கலாம்
ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன்- அல்லது மீடியா டெக் வசதி இடம்பெறும். இந்த ஸ்மார்ட் போனானது கவர்ச்சியான தோற்றத்தை பெற்றுள்ளது. அதேபோல் இது 5ஜி டூயல் பேண்ட் சேவையுடன் களமிறங்குகிறது. இந்த மொபைானது ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும்.

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எஸ் 5
இந்த போனானது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எஸ் 5-ன் அடுத்தக்கட்டமாக இருக்க வாய்ப்புள்ளது. இதில் 2400*1080 தீர்மானங்கள் கொண்டிருக்கிறது. அதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 ஆக்டோ செயலி மூலம் இயக்கப்படுகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ்
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதி இணைக்கப்பட்டுள்ளது. விவோ எஸ் 5 4,010 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அதோடு 44W அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இசட் 6 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

விவோ இசட் 6 ஸ்மார்ட்போனில் 5 ஜி டூயல் பேண்ட்
அதேபோல், விவோ இசட் 6 ஸ்மார்ட்போனில் 5 ஜி டூயல் பேண்ட் இணைப்பு பெறுகிறது. மேலும் 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இயக்க மென்பொருள் மூலம் இயங்குகிறது. மேலும் 6.57 அங்குல முழு எச்டி + டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

8 ஜிபி + 128 ஜிபி
இந்த ஸ்மார்ட்போனின் விலை யுவான் 2,198 (ரூ .22,500), 8 ஜிபி + 128 ஜிபி மாறுபாடு யுவான் 2,598 (ரூ .27,000) கிடைக்கிறது. இந்த சாதனம் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்று எந்த தகவலும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

எஸ் 6 மார்ச் 31 ஆம் வெளியிட திட்டம்
இந்த நிலையில் விவோ நிறுவனம் தனது டூயல் பேண்ட் 5 ஜி மாடல் போனான எஸ் 6 மாடல் போனை வருகிற மார்ச் 31 ஆம் வெளியிட இருப்பதை உறுதியாக அறிவித்துள்ளது.
file images


Click it and Unblock the Notifications