மார்ச் 17 குறிச்சாச்சு.. 7200mAh பேட்டரி.. 4D கேம் வைப்ரேஷன்.. ரிவர்ஸ் சார்ஜிங்.. புது Vivo போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் விவோ டி5எக்ஸ் 5ஜி (Vivo T5x 5G) ஸ்மார்ட்போனானது பட்ஜெட் பிரியர்களை தட்டித்தூக்கும்படியான பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது. இப்போது, கலர் விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, சிப்செட், பேட்டரி மற்றும் கேமிங் பீச்சர்கள் உறுதியாகின. இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வருகிற மார்ச் 17ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதனால், பீச்சர்கள் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டு வருகின்றன. லேட்டஸ்ட் பீச்சராக கலர் விவரங்கள் உறுதியாகின. இதையும், முன்னதாக வெளியான பீச்சர்களையும் தெரிந்து கொள்ளலாம்.

விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T5x 5G Specifications): 7200mAh பேட்டரி மட்டுல்லாமல், ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging), சூப்பர் சேவர் மோட் (Super Saver Mode) போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது. மேலும், 6 வருடங்களுக்கான பேட்டரி ஹெல்த் வாரண்டி கொடுத்து உள்ளது. இந்த செக்மெண்ட்டில் ஃபாஸ்டெட் சிப்செட்டை கொண்டுள்ளது.
40 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக், 93 மணி நேரங்களுக்கு மியூசிக் பிளேபேக் மற்றும் 15+ மணி நேரங்களுக்கு பிஜிஎம்ஐ கேமிங் பேக்கப் பெற்று கொள்ளலாம். கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக பீச்சர்களையும் இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது கொடுத்து உள்ளது. அல்ட்ரா கேம் மோட் (Ultra Game Mode), 4டி கேம் வைப்ரேஷன் (4D Game Vibration) உள்ளது.
மேலும், கேம் வாய்ஸ் சேஞ்சர் (Game Voice Changer) கிடைக்கிறது. டூயஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளது. சைபர் கிரீன் (Cyber Green) மற்றும் ஸ்டார் சில்வர் (Star Silver) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ (Octa Core MediaTek Dimensity 7400 TURBO) சிப்செட் கிடைக்கிறது.
1 மில்லியனுக்கும் அதிகமாக அன்டுடு ஸ்கோரை இந்த சிப்செட் கொண்டுள்ளது. 10 சதவீத ஓவரால் பர்ஃபாமென்ஸ் மற்றும் 15 சதவீத ஏஐ பர்ஃபாமென்ஸ் பூஸ்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பீச்சர்களுடன் பிளிப்கார்ட் மற்றும் விவோ தளங்களில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு உள்ளது. மற்ற பீச்சர்கள் வரும் நாட்களில் உறுதி செய்யப்பட உள்ளன.
முன்னதாக வெளியான விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலையை பார்த்தால், இந்த டி5எக்ஸ் ஸ்மார்ட்போனின் பட்ஜெட்டை தெரிந்து கொள்ள முடியும். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
6.72 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) கிடைக்கிறது. ஆகவே, விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் எதிர்பார்க்கலாம்.
மேலும், 50 எம்பி ரியர் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) உள்ளது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் டியூரபிலிட்டி மற்றும் IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ரூ.13,999 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,000 பட்ஜெட்டில் டி5எக்ஸ் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








