Vivo சக்கைப்போடு.. பட்ஜெட்ல 7200mAh பேட்டரி.. SONY கேமரா.. 44W சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பெரிய பேட்டரியுடன் வெளியான விவோ டி5எக்ஸ் 5ஜி (Vivo T5x 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கிவிட்டது. 7200mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ டி5எக்ஸ் 5ஜி விலை (Vivo T5x 5G Price):
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.18,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.20,999 ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகவே, ரூ.17,499 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஸ்டார் சில்வர் (Star Silver) மற்றும் சைபர் கிரீன் (Cyber Green) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 6 (Funtouch OS 6) கிடைக்கிறது. 2 ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates), 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T5x 5G Specifications):
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Turbo 4nm) சிப்செட்டை இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மாலி ஜி615 எம்சி 2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.
6.76 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 382 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுத்து உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங்டுடன் 32 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு மாடல்களில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. ஆனால், இந்த ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கூடுதலாக கிடைத்து உள்ளது.
44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7200mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியுடன் 8.39 எம்எம் தடிமன் மற்றும் 219 கிராம் எடை உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. லேட்டஸ்ட் விவோ மாடல்களில் கிடைக்கும் MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








