Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.3,975 டிஸ்கவுண்ட்ல 7200mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிக் பேக் தீபாவளி சேல் 2026 (Big Bang Diwali Sale 2026) என்னும் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இதில் 7200mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி கேமராவுடன் வெளியாகிய விவோ டி5எக்ஸ் 5ஜி (Vivo T5x 5G) ஸ்மார்ட்போன் டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கிறது. இந்த விவோ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.

இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.27,249ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,925 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.23,274 விலைக்கு இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மேலும் 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது.

பொளக்குது விற்பனை.. ரூ.3,975 டிஸ்கவுண்ட்ல 7200mAh பேட்டரி.. மாடல்?

பிரீமியம் லுக் கொடுக்கும்படி சைபர் கிரீன் (Cyber Green), ஃபிளேம் ரெட் (Flame Red) மற்றும் ஸ்டார் சில்வர் (Star Silver) ஆகிய கலர்களில் இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்யலாம். இதுபோக ப்யூஷன் ரெட் (Fusion Red) என்னும் புதிய கலர் வேரியண்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. கேம் வாய்ஸ் சேஞ்சர் (Game Voice Changer), அல்ட்ரா கேம் மோட் (Ultra Game Mode) உள்ளது.

விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T5x 5G Specifications): ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூசன் கொண்ட 6.76 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Turbo 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது. 4டி கேம் வைப்ரேஷன் (4D Game Vibration) உள்ளது.

பர்ஃபாமென்ஸ் மட்டுமல்லாமல், கேமரா பிரியர்களுக்கும் பக்கா அவுட்புட் கொடுக்கும்படி 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 4K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி ஃப்ரன்ட் கேமரா கிடைக்கிறது.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7200mAh பேட்டரியை இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 8.39 எம்எம் தடிமன் வருகிறது. மொத்தமாக 219 கிராம் எடை கொண்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) உள்ளது.

இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. மேலும், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் மட்டுமல்லாமல், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ. 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டியுடன் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo T5x 5G With 6GB RAM Gets Rs 3975 Disocunt on Flipkart Diwali Sale 2026 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X