Home
Mobile

பிளிப்கார்ட் GOAT சேல்.. 7200mAh பேட்டரி.. நம்ப முடியாத ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் கோட் சேல் 2026 (Flipkart GOAT Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான விவோ ஸமார்ட்போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.20,000 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் GOAT சேல்.. நம்ப முடியாத ஆஃபரில் Vivo 5ஜி போன்..

விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T5x 5G Specifications): விவோ டி5எக்ஸ் 5ஜி போன் 6.76 இன்ச் டிஸ்பிளேவை ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2408×1080 பிக்சல்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 50எம்பி சோனி IMX852 ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் 4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவும் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சக்திவாய்ந்த ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 டர்போ சிப்செட் (4nm Octa Core MediaTek Dimensity 7400 Turbo) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியுடன் விவோ டி5எக்ஸ் 5ஜி போன் வெளியாகி உள்ளது. அதேபோல் MIL-STD-810H மிலிட்டரி கிரேட் டியூரபிலிட்டி கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதுவும் 5ஜி SA and NSA, 4ஜி VoLTE, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பைடூ, யுஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

பிளிப்கார்ட் GOAT சேல்.. நம்ப முடியாத ஆஃபரில் Vivo 5ஜி போன்..

விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 7200mAh பேட்டரி உடன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஸ்டார் சில்வர் மற்றும் சைபர் கிரீன் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Vivo T5X 5G with 6GB RAM available at 21 percent discount in Flipkart GOAT sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X