ஓடியாங்க, ஓடியாங்க.. 7200mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் இப்போது Flipkart SASA LELE எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் 7200எம்ஏஎச் பேட்டரி கொண்ட விவோ 5ஜி போன் மாடலும் தள்ளுபடி விையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.20,999 விலையில் வாங்கிவி முடியும்.

விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T5x 5G Specifications): டைமன்சிட்டி 7400 டர்போ சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒர்ஜின்ஓஎஸ் 6 மூலம் விவோ டி5எக்ஸ் 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 6.76 இன்ச் டிஸ்பிளேவை ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது விவோ டி5எக்ஸ் 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2408×1080 பிக்சல்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
அதுவும் 50எம்பி சோனி IMX852 ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனில் 4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவும் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியுடன் விவோ டி5எக்ஸ் 5ஜி போன் வெளியாகி உள்ளது. MIL-STD-810H மிலிட்டரி கிரேட் டியூரபிலிட்டி கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5ஜி SA and NSA, 4ஜி VoLTE, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பைடூ, யுஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.
சைபர் கிரீன் மற்றும் ஸ்டார் சில்வர் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். 7200mAh பேட்டரி உடன் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications