Home
Mobile

வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. 7200mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. SONY கேமரா.. புது Fusion Red வேரியண்ட்!

7200mAh பேட்டரி மட்டுமல்லாமல், 44W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, ஐபி69 ரேட்டிங் போன்ற பீச்சர்களுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற விவோ டி5எக்ஸ் 5ஜி (Vivo T5x 5G) ஸ்மார்ட்போனின் புதிய கலர் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, கிரீன் மற்றும் சில்வர் ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைத்தது. இப்போது, ஃப்யூஷன் ரெட் (Fusion Red) கலரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேட் ஃபினிஷிங் கொண்ட மிடில் ஃபிரேம் பிளாக் கலரில் இருக்கிறது. பேக் பேனல் ரெட் கலரில் இருக்கிறது. ஆகவே, டூயல் டோன் கொண்ட டிசைனை பார்க்க முடிகிறது.

வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. 7200mAh பேட்டரி.. 44W சார்ஜிங்!

விவோ டி5எக்ஸ் 5ஜி விலை (Vivo T5x 5G Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆக இருக்கிறது. இந்த விலைகளுடன் ஃப்யூஷன் ரெட் கலர் வேரியண்ட்டின் விற்பனை ஜூலை 30ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த கலர்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே இருக்கும் சைபர் கிரீன் (Cyber Green) மற்றும் ஸ்டார் சில்வர் (Star Silver) கலர்களும் கிடைக்கின்றன. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விவோ இந்தியா ஈ-ஸ்டோர் (Vivo India e-store) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். கலரில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பீச்சர்களில் எந்த மாற்றமும் கிடையாது.

விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T5x 5G Specifications): 50 எம்பி கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.

6.76 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Turbo 4nm) சிப்செட்டை இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது.

மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6.0 (OriginOS 6.0) கொண்டுள்ளது. 2 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. மேலும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7200mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. பெரிய பேட்டரியாக இருப்பதால், 8.39 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. ஆகவே, ஸ்லிம் மாடலாக இதை எதிர்பார்க்க முடியாது. 219 கிராம் எடை கொண்ட மாடலாக இருக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன.

கிட்டத்தட்ட மிட்-ரேஞ்ச் விலையை கொண்டிருப்பதால் IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல் IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் & ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. மேலும், டியூரபிலிட்டியை விரும்பும் பிரியர்களை தட்டித்தூக்க எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை இந்த விவோ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo T5x 5G Fusion Red Colour Launched in India Sale From July 30 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X