விவோ போனுக்கு செம ஆஃபர்.. சோனி கேமரா.. IP69 ரேட்டிங்.. 7200mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மே 9-ம் தேதி Sasa Lele Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விவோ எ5எக்ஸ் 5ஜி (vivo T5x 5G) ஸ்மார்ட்போன் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மே 9-ம் தேதி நடைபெறும் சிறப்பு விற்பனையில் விவோ எ5எக்ஸ் 5ஜி போனுக்கு ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த போனை ரூ.20,999 விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T5x 5G Specifications): 6.76 இன்ச் டிஸ்பிளேவை ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது விவோ டி5எக்ஸ் 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2408×1080 பிக்சல்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
50எம்பி சோனி IMX852 ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் 4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவும் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒர்ஜின்ஓஎஸ் 6 மூலம் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியுடன் விவோ டி5எக்ஸ் 5ஜி போன் வெளியாகி உள்ளது. அதேபோல் MIL-STD-810H மிலிட்டரி கிரேட் டியூரபிலிட்டி கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
5ஜி SA and NSA, 4ஜி VoLTE, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பைடூ, யுஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.
7200mAh பேட்டரி உடன் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
சைபர் கிரீன் மற்றும் ஸ்டார் சில்வர் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications