SALE பொளக்குது.. ஆஃபர் ரேட்ல 7200mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. SONY கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
விவோ டி5 லைட் 5ஜி (Vivo T5 Lite 5G) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இதனால், முந்தைய மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் 7200mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சோனி கேமராவுடன் வெளியாகிய விவோ டி5எக்ஸ் 5ஜி (Vivo T5x 5G) ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
இந்திய மார்கெட்டில் விவோ டி5 லைட் 5ஜி இன்று வெளியாகிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஆனால், இதைவிட பெரிய பேட்டரியுடன் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அதே 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது.

இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலையானது 10 சதவீத தள்ளுபடி போக ரூ.24,999ஆக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.23,999 விலைக்கு இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.
விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T5x 5G Specifications): 6.76 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
382 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுத்துள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Turbo 4nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொண்ட மாடலாக இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொடுத்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்ரும் 32 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது.
44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7200mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 8.39 எம்எம் தடிமன் மற்றும் 219 கிராம் எடை கொடுத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொடுக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொடுக்கிறது.
ஸ்டார் சில்வர் (Star Silver) மற்றும் சைபர் கிரீன் (Cyber Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை பார்க்கையில், ஏஐ கிரியேஷன், ஏஐ கேப்சன், பிரைவேட் ஸ்பேஸ், விவோ டாக்மாஸ்டர் போன்ற பீச்சர்கள் வருகின்றன. இதிலும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் சர்டிபிகேஷன் கிடைக்கிறது.
ஆனால், IP65 ரேட்டிங் மட்டுமே கொடுக்கிறது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே கிடைக்கிறது. 6500mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் கிடைக்கிறது. வேவ் ப்ளூ மற்றும் டிவைலைட் ஷேடோ கலர்களில் கிடைக்க இருக்கிறது. இது விவோ டி5எக்ஸ் 5ஜி மாடலைவிட மலிவான விலைக்கு கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications