இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. ரூ.12,999 போதும்.. 5500mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 8MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் சத்தமே இல்லாமல், விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் மாடலாக விவோ டி5இ (Vivo T5e) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. நேரடியாக விற்பனைக்கு வந்தது மட்டுமல்லாமல், அறிமுக சலுகையில் நம்ப முடியாத விலைக்கு கிடைக்கிறது. இந்த விவோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதில் விவோ நிறுவனமும் மும்முரம் காட்டி வருகிறது. 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை உயர்ந்து வருவதால், 4ஜி மாடல்களில் கவனம் செலுத்தி வருகிறது. இப்போது, 4ஜி மாடலாக இந்த விவோ டி5இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், டிசைனில் பிரீமியம் காட்டி இருக்கிறது.

சிங்கிள் ரியர் கேமராவுடன் புதுவித லுக் கொடுக்கிறது. மேட் ஃபிரேம் டிசைனில் (Matte Frame Design) ஷேடோ கிரே (Shadow Grey) மற்றும் ஏரோ ப்ளூ (Aero Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistance) கொடுக்கிறது.
மேலும், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியுடன் (Military-Grade Durability) டஸ்ட், ஸ்பிளாஷெஸ், டிராப் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இதுபோக டிஸ்பிளேவுக்கு வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) மற்றும் கிரீஸி ஹேண்ட் (Greasy Hand Touch) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பட்ஜெட்டிலும் டிசைனில் பட்டையை கிளப்பி இருக்கிறது.
விவோ டி5இ அம்சங்கள் (Vivo T5e Specifications): 6.74 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லீப் கம்போர்ட் மோட் (Sleep Comfort Mode) உள்ளிட்ட பீச்சர்களும் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது.
மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த விவோ டி5இ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஏஐ கிரியேஷன் (AI Creation, கட்அவுட் (Cutout), விவோ டாக்மாஸ்டர் (Vivo DocMaster) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கப்பட்டு உள்ளது. 64 ஜிபி மெமரி கிடைக்கிறது.
இதுபோக 2 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். டூயல் சிம் சிலாட்டுடன் இந்த மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8 எம்பி மெயின் கேமராவுடன் இந்த விவோ டி5இ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 5 எம்பி செல்பீ கேமராவை பேக் செய்துள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
5500mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த விவோ டி5இ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்தால், 18 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக், 47 மணி நேரங்களுக்கு மியூசிக் பிளேபேக் பெற்று கொள்ளலாம். சூப்பர் பேட்டரி சேவர் மோட் (Super Battery Saver Mode) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4 வருட பேட்டரி ஹெல்த் வாரண்டி உள்ளது.
மேலும், ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த விவோ டி5இ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. யுனிசோக் டி7225 ஆக்டா கோர் (UNISOC T7225 Octa Core) சிப்செட் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.12,999 விலைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications