Home
Mobile

பேக்-டூ-பேக் சிக்ஸ் அடிக்கும் VIVO.. 9020mAh-ஐ தெடர்ந்து 7200mAh பேட்டரி உடன் இன்னொரு புது 5ஜி போன்!

இந்தியாவில், 9020எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ டி5 ப்ரோ (Vivo T5 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, விவோ நிறுவனம் தனது டி-சீரிஸ் சீரீஸில் மற்றொரு புதிய மாடலை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக தெரிகிறது. அது விவோ டி5 (Vivo T5) மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் தற்போது இது, கூகுள் பிளே சப்போர்ட்டட் டிவைஸஸ் (Google Play Supported Devices) பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அறியாதோர்களுக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சான்றிதழ் கட்டாயம் ஆகும். ஏனெனில், ஒரு ஸ்மார்ட்போன் - பிளே ப்ரொடெக்ட் சான்றிதழ் பெற்று இருப்பதையும், அதிகாரப்பூர்வ கூகுள் ஆப்கள் உடன் வருவதையும், மேலும் ஆண்ட்ராய்டின் பாதுகாப்பு மற்றும் அனுமதிகள் கட்டமைப்பிற்கான ஆதரவையும் உறுதி செய்கிறது.

7200mAh பேட்டரி உடன் இன்னொரு புது 5ஜி போன்!

சுவாரஸ்யமாக, விவோ டி5 ஸ்மார்ட்போன் ஆனது கூகுள் பிளே சப்போர்ட்டட் டிவைஸஸ் பட்டியலில் V2543 என்கிற மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது. இது விவோ ஒய்31டி சீரிஸின் அதே மாடல் எண்ணாகும். குறிப்பிட்ட விவோ ஒய் சீரீஸ் மாடல் ஆனது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வெளியே ஒரு பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

துரதிர்ஷ்டவசமாக, கூகுள் பிளே சப்போர்ட்டட் டிவைஸஸ் பட்டியல் ஆனது விவோ டி5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளியிடவில்லை. ஆனால் இது 7200எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட், IP68 மற்றும் IP69 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறன் மற்றும் ஆரிஜின்ஓஎஸ் 6 சாஃப்ட்வேர் உடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இது 50எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2எம்பி இரண்டாம் நிலை யூனிட்டை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்றும், முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமராவை பயன்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை விவோ டி5 ஸ்மார்ட்போன் ஆனது எச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட 6.75-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 44W சார்ஜிங்கை ஆதரிக்கவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜை வழங்கவும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த் ஸ்மார்ட்போன் கோல்ட் மற்றும் கிரே ஆகிய இரண்டு கலர்களில் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மீதம் உள்ள அம்சங்கள் குறித்து விவரங்கள் இல்லை.

விவோ டி5 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? எதிர்பார்க்கப்படும் அம்சங்களை கருத்தில் கொண்டால், விவோ டி5 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பேட்டரியை மையமாக கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. இந்த போனின் விலை ரூ.25,000-க்குள் இருக்க வாய்ப்புள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட் ஆனது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக இந்தியாவில் அறிமுகமான விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: இந்தியாவில் விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும், 8GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.33,999 க்கும், டாப் -எண்ட் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.83-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே
- 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் வரையிலான லோக்கல் பீக் பிரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங்
- 449 பிபிஐ பிக்சல் டென்சிட்டி

- HDR10+ ஆதரவு
- ஸ்லீப் கம்ஃபர்ட் மோட் மற்றும் ஆன்டி-மோஷன் சிக்னஸ் மோட்
- SGS லோ ப்ளூ லைட் மற்றும் லோ ஃப்ளிக்கர் சான்றிதழ்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 + IP69 ரேட்டிங்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- சோனி IMX882 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 10x வரை லாஸ்லெஸ் ஜூம் வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 2 மெகாபிக்சல் போக்கே கேமரா
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 4K வீடியோ ரெகார்டிங் (முன் மற்றும் பின் பக்கம்)

- 9020mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஆக்சிலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், ப்ராக்சிமிட்டி சென்சார் மற்றும் கைரோஸ்கோப்
- 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்
- யுஎஸ்பி டைப்-C போர்ட்
- அளவீட்டில் 8.25 மிமீ
- எடையில் சுமார் 213 கிராம்

Best Mobiles in India

English summary
Vivo T5 With 7200mAh Battery Tipped to Launch Soon Check Out Major Specifications Price Range in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X