மிட்-ரேஞ்ச் மிரளுது.. 9020mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் பெரிய பேட்டரி மாடலான விவோ டி5 ப்ரோ 5ஜி (Vivo T5 Pro 5G) ஸ்மார்ட்போனின் விலை, ரேம் மற்றும் மெமரி விவரங்கள் வெளியீட்டுக்கு முன்னதாகவே கசிந்துள்ளன. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் 9020mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், IP69 ரேட்டிங், 12 ஜிபி ரேம் கொடுக்க இருக்கிறது. இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனானது, 9000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்திய மார்கெட்டில் வெளியாகிவிட்டது. இதற்கு முன்னதாக ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G) ஸ்மார்ட்போனானது, 10001mAh பேட்டரியுடன் வெளியாகியது. இந்த மாடல்களுக்கு போட்டியாக 9020mAh பேட்டரி கொண்ட மாடலாத விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.

வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, இந்த தளத்தில் பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் ரேம், மெமரி மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி (Sanju Choudhary) அவரது எக்ஸ் தளத்தில் இந்த விவரங்களை பதிவிட்டுள்ளார்.
அதன்படி 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.36,999ஆக இருக்கிறது. இது டாப் எண்ட் வேரியண்ட்டாக இருக்கிறது. ஆகவே, பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.30,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும். எப்படி பார்த்தாலும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாக இருப்பது தெரிகிறது. ஆகவே, இந்த செக்மெண்ட்டில் பெரிய பேட்டரி மாடல்களில் முக்கியமானதாக இருக்கும்.
பிளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 9020mAh பேட்டரி கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இதுபோக லேட்டஸ்ட் ஓர்ஜின் ஸ்மூத் என்ஜின் (Origin Smooth Engine) கிடைக்க இருக்கிறது. 120 FPS கேமிங் அவுட்புட் கிடைக்க இருக்கிறது. பெரிய பேட்டரிக்கு சில பீச்சர்கள் உள்ளன.
ஆகவே, 7கே விசி கூலிங் சிஸ்டம் (7K VC Cooling System) கிடைக்க இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்க உள்ளது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களுடன் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. 9000mAh போன்ற பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
சிங்கிள் சார்ஜில் 12.6 மணி நேரங்களுக்கு கேமிங் பேக்கப் பெற்று கொள்ளலாம். 90 மணி நேரங்களுக்கு மியூசிக் பிளே பேக் கொடுக்கும். மேலும், 12.9 மணி நேரங்களுக்கு வீடியோ ரெக்கார்டிங் பேக்கப் கொடுக்கிறது. மேலும், சூப்பர் பேட்டரி சேவர் மோட் (Super Battery Saver Mode) கிடைக்கிறது. 5 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டி கொடுக்கிறது. இந்த பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டவையாகும்.
மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில், 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்க இருக்கிறது. மேலும், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு முன்னதாக மற்ற பீச்சர்களை விவோ நிறுவனமே உறுதி செய்ய இருக்கிறது.


Click it and Unblock the Notifications








