நாளை விற்பனைக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்.. 9020mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ டி5 ப்ரோ 5ஜி (Vivo T5 Pro 5G) ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய விவோ போன் நாளை (ஏப்ரல் 21) முதல்முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போனை வாங்க முடியும். இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி5 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.33,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39,999 விலையிலும் வாங்க முடியும். காஸ்மிக் பிளாக் (Cosmic Black) மற்றும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடியும் உள்ளது.

விவோ டி5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T5 Pro 5G Specifications): குறிப்பாக 6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் விவோ டி5 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
அதேபோல் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Octa Core Snraapdgon 7s Gen 4) சிப்செட் உடன் இந்த விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
அதுவும் OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 12ஜிபி வரை மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.
விவோ டி5 ப்ரோ 5ஜி போன் 50எம்பி Sony IMX882 மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த போன் வெளியாகி உள்ளது.
புதிய விவோ டி5 ப்ரோ 5ஜி போன் 9020mAh பேட்டரி மற்றும் 90W சார்ஜிங் உடன் வெளியாகி உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 பிஇ, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), கியூஇசட்எஸ்எஸ் (QZSS), புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 213 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications








