ஏப்ரல் 15 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. 9020mAh பேட்டரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்!
மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ டி5 ப்ரோ 5ஜி போனின் அறிமுக தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஏப்ரல் 15-ம் தேதி அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ டி5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T5 Pro 5G Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 7s Gen 4 SoC) சிப்செட் உடன் இந்த விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியும் இந்த போனில் உள்ளது. ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்
(Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.
விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50MP Sony IMX882 மெயின் கேமரா உள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

9020எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
7000mm² வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமை (Vapor chamber cooling system) கொண்டுள்ளது இந்த சாதனம். கிளேசியர் ப்ளூ மற்றும் காஸ்மிக் பிளாக் நிறங்களில் விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக ரூ.29,999 விலையில் இந்த விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.


Click it and Unblock the Notifications








