Home
Mobile

பிளிப்கார்ட் சேல் 2026.. 9020எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

நாளை (அக்டோபர் 9) பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் விவோ டி5 ப்ரோ 5ஜி (Vivo T5 Pro 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.

அதாவது 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.36,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் இந்த விவோ ஸ்மார்ட்போன் ரூ.30,999 விலையில் வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும்.

பிளிப்கார்ட் சேல் 2026.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ டி5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T5 Pro 5G Specifications): 6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் விவோ டி5 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Octa Core Snraapdgon 7s Gen 4) சிப்செட் உடன் இந்த விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 12ஜிபி வரை மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

50எம்பி Sony IMX882 மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ டி5 ப்ரோ 5ஜி போன். குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

பிளிப்கார்ட் சேல் 2026.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த போன் வெளியாகி உள்ளது.

விவோ டி5 ப்ரோ 5ஜி போன் 9020mAh பேட்டரி மற்றும் 90W சார்ஜிங் உடன் வெளியாகி உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 பிஇ, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), கியூஇசட்எஸ்எஸ் (QZSS), புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 213 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
vivo T5 Pro 5G Available at Rs 30999 During Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X