களைகட்டும் Flipkart தீபாவளி சேல்.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. 9020mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Bang Diwali Sale 2026 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ டி5 ப்ரோ 5ஜி போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி5 ப்ரோ 5ஜி போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.36,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.4000 வரை தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை சற்று குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ டி5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T5 Pro 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Octa Core Snraapdgon 7s Gen 4) சிப்செட் உடன் இந்த விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் 6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் விவோ டி5 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
குறிப்பாக OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 6ஜிபி மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.
அதுவும் 50எம்பி Sony IMX882 மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ டி5 ப்ரோ 5ஜி போன். குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த போன் வெளியாகி உள்ளது.
9020mAh பேட்டரி மற்றும் 90W சார்ஜிங் உடன் விவோ டி5 ப்ரோ 5ஜி போன் வெளியாகி உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 பிஇ, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), கியூஇசட்எஸ்எஸ் (QZSS), புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 213 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications
