Home
Mobile

ஒரே போடுங்க இது.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. புது Vivo போன்.. எந்த மாடல்?

பட்ஜெட்டில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு பக்கா ஆப்ஷனாக விவோ டி5 லைட் (Vivo T5 Lite) வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. இந்த பீச்சர்களை பார்த்துவிடுவோம். பிறகு பட்ஜெட் விவரங்களுக்கு செல்லலாம்.

விவோ நிறுவனத்தின் டி சீரிஸ் மாடல்களுக்கு கேமிங் பிரியர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் லைட் மாடல்கள் பட்ஜெட் விலையில் பெரிய பேட்டரியை கொடுப்பதால், விற்பனையிலும் சக்கைப்போடு போடுகின்றன. இந்த பட்டியலில் விவோ டி5 லைட் சேர்ந்துள்ளது. கசிந்த பீச்சர்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஒரே போடுங்க இது.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்!

விவோ டி5 லைட் அம்சங்கள் (Vivo T5 Lite Specifications): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமராவை இந்த விவோ டி5 லைட் கொடுத்து உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி 6என்எம் (MediaTek Dimensity 6300 5G 6nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது.

மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரியுடன் இந்த விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.39 எம்எம் தடிமன் மற்றும் 209 கிராம் எடை கொடுத்து இருக்கிறது. 2 கலர்களில் கிடைக்க இருக்கிறது.

ஆகவே, டிவைலைட் ஷேடோ (Twilight Shadow) மற்றும் ஓசன் ப்ளூ (Ocean Blue) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. மேலும், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) இந்த விவோ டி5 லைட் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், முந்தைய மாடலான விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) ஸ்மார்ட்போன் கடந்தாண்டு ஜூன் மாதத்தில் இறுதியில் வெளியாகியது. ஆகவே, இந்த ஜூனில் விவோ டி5 லைட் மாடலை எதிர்பார்க்கலாம்.

மேலும், விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருந்தது. அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் ரூ.10,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருந்தது. இவை அறிமுக விலைகளாக இருக்கின்றன. இப்போது மாறுபடலாம்.

ஆகவே, விவோ டி5 லைட் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளது. ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். இதில் டிசைன் மற்றும் கலர் விவரங்கள் தெரியவரும். டி சீரிஸ் மாடல்களாக இருப்பதால், டூயல் கேமரா கொண்ட மாடலாகவே இருக்கும். இருப்பினும், பக்கா டியூரபிலிட்டி கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo T5 Lite With 6500mAh Battery 44W Fast Charging 50MP Camera Full Specifications Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X