Home
Mobile

Vivo பிரியர்களுக்கு வந்த இடி.. ரூ.5,000 மேல எகிறிடுச்சு.. விவோ டி5எக்ஸ் டு விவோ டி4 லைட்.. புது விலை எப்படி?

விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்ந்து வருகின்றன. இப்போது, விவோ டி5எக்ஸ் (Vivo T5x), விவோ டி5 லைட் (Vivo T5 Lite) மற்றும் விவோ டி4 லைட் (Vivo T4 Lite) ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதை விவோ இந்தியா நிறுவனமானது, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ரூ.5,000 வரையில் இந்த விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. சொல்லப்போனால், இவை பட்ஜெட் மாடலாக களமிறங்கின. இப்போது, கிட்டத்தட்ட மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகராக விலையை எட்டிவிட்டன. ஆனால், பீச்சர்களில் எந்த மாற்றமும் இருக்காது. விவோ வி சீரிஸ் மாடல்களின் விலையும் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Vivo பிரியர்களுக்கு வந்த இடி.. ரூ.5,000 மேல எகிறிடுச்சு.. எவ்வளவு?

விவோ டி5எக்ஸ் ஸ்மார்ட்போனின் பழைய விலை: 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும் இருந்தது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆக இருந்தது. இப்போது, ரூ.5,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

விவோ டி5எக்ஸ் ஸ்மார்ட்போனின் புதிய விலை: 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆக இருக்கிறது. ஈ-காமர்ஸ் தளங்களின் தள்ளுபடி பொருந்தாது.

விவோ டி5 லைட் ஸ்மார்ட்போனின் பழைய விலை: 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆகவும் இருந்தது. 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருந்தது. இப்போது, ரூ.4,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

விவோ டி5 லைட் ஸ்மார்ட்போனின் புதிய விலை: 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,999ஆக இருக்கிறது. ஈ-காமர்ஸ் தளங்களின் தள்ளுபடிக்கு சம்பந்தமில்லை.

விவோ டி4 லைட் ஸ்மார்ட்போனின் பழைய விலை: 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆகவும் இருந்தது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999 ஆகவும் இருந்தது.

விவோ டி4 லைட் ஸ்மார்ட்போனின் பழைய விலை: 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999 ஆகவும் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo T5 Lite Vivo T5x 5G Vivo T4 Lite Price Hiked in India Check New And Old Prices
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X