Home
Mobile

Vivo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 6500எம்ஏஎச் பேட்டரி.. 44W சார்ஜிங்.. IP65 ரேட்டிங்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் விவோ டி5 லைட் (Vivo T5 Lite) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது கூகுள் பிளே டேட்டாபேஸ் தளத்தில் இந்த போன் V2557 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

விவோ டி5 லைட் அம்சங்கள் (Vivo T5 Lite specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் (Dimensity 6400 chipset) உடன் விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

Vivo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 6500எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி இருப்பதாக கூறப்படுகிறது.

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) போன்ற வசதிகள் இந்த விவோ டி5 லைட் போனில் உள்ளன. அதுவும் இந்த போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

Vivo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 6500எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

6500எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo T5 Lite spotted on Google Play database: May launch soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X