அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 6500mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி5 லைட் (Vivo T5 Lite) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ டி5 லைட் அம்சங்கள் (Vivo T5 Lite Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 அல்லது மீடியடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் உடன் இந்த புதிய விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் தரமான கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும்.

6.77-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
Funtouch OS சார்நத ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் அறிமுகம் செய்யப்படும்.
50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும்.

6500mAh பேட்டரி உடன் விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் விவோ டி5 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கம்மி விலையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications