Home
Mobile

வாங்குனா இப்படி ஒரு ஸ்மார்ட்போன் வாங்கனும்.. 6500mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

விவோ ஸ்மார்ட்போன் பிரியர்களே வாங்குனா இப்படி ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று வெயிட்டிங் மோடில் இருக்கும்படி விவோ டி5 லைட் 5ஜி (Vivo T5 Lite 5G) வெளியாக இருக்கிறது. இப்போது, இந்திய வெளியீடு மற்றும் விற்பனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய மார்கெட்டில் விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 6000mAh பேட்டரி கொடுத்தது. ஆனால், இப்போது வெளியாக இருக்கும் விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 6500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது.வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படவில்லை.

வாங்குனா இப்படி ஒரு ஸ்மார்ட்போன் வாங்கனும்.. 6500mAh பேட்டரி!

ஆனால், விரைவில் வெளியாகும் என்று பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. 6500mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஜூன் மாதம் வெளியாகியது. ஆகவே, இந்த ஜூலை மாதத்தில் கட்டாயம் விவோ டி5 லைட் 5ஜி வெளியாகும்.

விவோ டி5 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T5 Lite 5G Specifications): 6500mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களை விவோ நிறுவனமே உறுதி செய்துள்ளது. இருப்பினும், மார்கெட்டில் முக்கிய பீச்சர்கள் கசிந்துவிட்டன. ஆகவே, இந்த விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது.

6.74 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்ப கேமராவை கொடுக்கிறது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலையை தெரிந்து கொள்ள விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை பார்க்க வேண்டும்.

இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனிலும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது.

ஆகவே, விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். கேமராவில் பெரிய மாற்றம் இருக்காது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரியை கொடுத்துள்ளது.

இந்த பேட்டரி சிஸ்டமானது, வோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. 8.19 எம்எம் தடிமன் மற்றும் 202 கிராம் எடை உள்ளது. MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையை ரூ.15,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். ஜூலை மாதத்தில் வெளியாகும். பிளிப்கார்ட் தளத்தில் ஓரிரு வாரத்தில் விற்பனைக்கும் கிடைக்கும். பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ப இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo T5 Lite 5G With 6500mAh Battery 44W Charging India Launch Confirmed Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X