Home
Mobile

இவ்ளோ கம்மி விலைக்கு 44W சார்ஜிங், 6500mAh பேட்டரி, IP65-ஆ.. வாய் பிளக்க வைக்கும் புது VIVO 5ஜி போன்!

இந்திய சந்தையில் ரூ.10000 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனையில் பட்டையை கிளப்பிய விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) மாடலின் அப்கிரேடெட் வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அது விவோ டி5 லைட் 5ஜி (Vivo T5 Lite 5G) ஸ்மார்ட்போனாகும்.

இதற்கிடையில் 91மொபைல்ஸ் வலைத்தளம் (91Mobiles) வழியாக கிடைத்து உள்ள ஒரு சமீபத்திய அறிக்கை ஆனது, ​​விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களையும், இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் அதன் விலை நிர்ணயம் (Price Range) குறித்த தகவல்களை வெளிப்படுத்தி உள்ளது.

இவ்ளோ கம்மி விலைக்கு 44W சார்ஜிங், 6500mAh பேட்டரி, IP65-ஆ!

விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விவோ டி5 லைட் 44W பாஸ்ட் சார்ஜிங் இடம்பெறும் என்றும், இது 6500mAh பேட்டரி உடன் வரும் என்றும் தொழில்துறை வட்டாரங்கள் மூலம் தெரிய வந்ததாக 91மொபைல்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது முன்னதாக வெளியான டி4 லைட் மாடலில் உள்ளதை விட 500mAh அதிகமாகும்.

மேலும் கடந்த ஆண்டு வெளியான மாடலில் இருந்த 15W அடாப்டர் வழியாக, முழுமையாக சார்ஜ் ஆக கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது, ஆனால் வரவிருக்கும் விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 44W எவ்வளவு வேகமாக சார்ஜ் ஆகும் என்று நமக்குத் தெரியாவிட்டாலும், அது அதன் முந்தைய மாடலை விட வேகமாக சார்ஜ் ஆகும் என்று உறுதியாக கூறலாம்.

விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அதே 6500mAh பேட்டரி மற்றும் 44W சார்ஜிங் வசதியானது ஐக்யூ இஸட்10எக்ஸ் (iQOO Z10x) ஸ்மார்ட்போனிலும் உள்ளது. இது முழுமையாக சார்ஜ் ஆக சுமார் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. ஆக விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனும் கூட இதேபோன்ற சார்ஜிங் நேரத்தை வழங்கலாம்.

வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?இது மேம்படுத்தப்பட்ட நீடித்துழைப்பிற்காக சற்றே சிறந்த ஐபி65 ரேட்டிங் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது எஸ்ஜிஸ்-ன் பைவ் ஸ்டார் ஓவர்ஆல் யூனிட் டிராப் ரெசிஸ்டென்ட்ஸ் சான்றிதழ் (SGS Five-Star Overall Unit Drop Resistance Certification) மற்றும் இராணுவத் தரச் சான்றிதழ் உடனும் (Military-Grade certification) வரலாம்.

எப்போது அறிமுகம்? என்ன விலை? இந்தியாவில் விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை, ஆனால் இந்த ஸ்மார்ட்போன் குறித்த வதந்திகள் வெளிவர தொடங்கி உள்ளதால், விரைவில் ஒரு அதிகாரப்பூர்வ டீசரை நாம் எதிர்பார்க்கலாம்.

விலையை பொறுத்தவரை ஸ்மார்ட்போன்களின் தற்போதைய விலை உயர்வுகளை கருத்தில் கொண்டால், விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நிச்சயமாக ரூ.10,000-க்கும் குறைவான விலையில் இருக்காது. இந்த ஸ்மார்ட்போன் ஐக்யூ இஸட்10எக்ஸ் ஸ்மார்ட்போனுடன் சில ஒற்றுமைகளை கொண்டிருப்பதால், இதன் விலை ரூ.15,000-க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

OPINION: இந்த விலைப் பிரிவில் பேட்டரி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் விவோ புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிகிறது. உண்மையிலேயே இது போட்டித்தன்மை வாய்ந்த விலையில் (ரூ.15,000 க்குள்) இது அறிமுகப்படுத்தப்பட்டால், விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, பட்ஜெட் விலைப்பிரிவில் ஒரு வலுவான போட்டியாளராக மாற்றக்கூடும்.

ரூ.15,000-க்கும் குறைவான பிரிவில் பேட்டரி ஆயுள் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனின் அப்டேட்களை கூர்மையாக கவனிக்க வேண்டும். நீங்கள் தற்போது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், வாங்கும் முடிவை எடுப்பதற்கு முன், இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீடு மற்றும் முழுமையான அம்சங்களுக்காக காத்திருப்பது உங்கள் பணத்திற்கும், உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo T5 Lite 5G With 44W Fast Charging 6500mAh Battery Launching Soon in India Price Under Rs 15000 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X