Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.18,499 போதும்.. 6500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் விவோ டி5 லைட் 5ஜி (Vivo T5 Lite 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ஆரம்பமே பேங்க் தள்ளுபடி போக கிடைப்பதால் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டிந் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.1,500 தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.18499 போதும்.. 6500mAh பேட்டரி.. மாடல்?

ஆகவே, ரூ.18,499 ஆரம்ப விலைக்கு இந்த விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு மட்டுமே இந்த ரூ.1,500 தள்ளுபடி கொடுக்கப்படும். டிவைலைட் ஷேடோ (Twilight Shadow) மற்றும் வேவ் ப்ளூ (Wave Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ டி5 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T5 Lite 5G Specifications): 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 0.08 எம்பி செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) இந்த விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 5 எம்பி செல்பீ கேமராவை பேக் செய்துள்ளது.

6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கொடுக்கப்பட்டு இருக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரியை இந்த விவோ டி5 லைட் 5ஜி பேக் செய்துள்ளது.

இந்த பேட்டரியுடன் 8.39 எம்எம் தடிமன் வருகிறது. மேலும், 209 கிராம் எடை கொண்ட மாடலாகவும் இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டு உள்ளது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுத்து இருக்கிறது.

ஏஐ கிரியோஷன் (AI Creation), ஏஐ டாகுமெண்ட்ஸ் (AI Documents), ஏஐ கேப்சன்கள் (AI Captions) மற்றும் டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (Transcript Assist) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. 5ஜி (5G), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜிபிஎஸ் மற்றும் டைப்-சி சார்ஜிங் உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo T5 Lite 5G With 44W Charging Sale Under Rs 19000 in Flipkart Check Bank Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X