Home
Mobile

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ டி5 லைட் 44W 5ஜி (Vivo T5 Lite 44W 5G) ஸ்மார்ட்போன் மாடல் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளியாகி உள்ளது. இப்போது விவோ டி5 லைட் 44று 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி5 லைட் 44W 5ஜி போனுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ டி5 லைட் 44W 5ஜி அம்சங்கள் (Vivo T5 Lite 44W 5G Specifications): விவோ டி5 லைட் 44W 5ஜி 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் இந்த விவோ டி5 லைட் 44W 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் இந்த விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது

50எம்பி ரியர் கேமரா உடன் விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

Origin OS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்பீக்கர்கள் போன்ற அனைத்து வசதிகளும் இந்த போனில் உள்ளன.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

Best Mobiles in India

English summary
vivo T5 Lite 44W 5G With 4GB RAM Available At 15 Percent Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X