நாளை விற்பனைக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் விவோ டி5 லைட் 44W 5ஜி (Vivo T5 Lite 44W 5G) ஸ்மார்ட்போனை நாளை (ஜூலை 22) முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ டி5 லைட் 44W 5ஜி விலை மற்றும் சலுகை
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி5 லைட் 44W 5ஜி மாடலின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி5 லைட் 44W 5ஜி மாடலின் விலை ரூ.21,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ டி5 லைட் 44W 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

விவோ டி5 லைட் 44W 5ஜி அம்சங்கள் (Vivo T5 Lite 44W 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் இந்த விவோ டி5 லைட் 44W 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி + 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என 3 வேரியண்ட்களில் இந்த விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில உள்ளது.
குறிப்பாக சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது
விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா உடன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் Origin OS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்பீக்கர்கள் போன்ற அனைத்து வசதிகளும் இந்த போனில் உள்ளன.

அதுவும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
மேலும் விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் 6500எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications