Home
Mobile

ஜூலை 16 வரை போனும் வாங்காதீங்க.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக ஜூலை 16-ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும். மேலும் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ டி5 லைட் 44W 5ஜி அம்சங்கள் (Vivo T5 Lite 44W 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் இந்த விவோ டி5 லைட் 44W 5ஜி மாடல் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

ஜூலை 16 வரை போனும் வாங்காதீங்க.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்..

6.4-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். அதேபோல் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த விவோ டி5 லைட் 44W 5ஜி போன் வெளியாகும்.

விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா உடன் புதிய வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஜூலை 16 வரை போனும் வாங்காதீங்க.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்..

6500எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ டி5 லைட் 44W 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதகி கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் ரூ.20.000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo T5 Lite 44W 5G India Launch Date Announced: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X