அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. செப்டம்பர் 2-ல் களமிறங்கும் புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி5 (vivo T5) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 2-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் விவோ டி5 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
விவோ டி5 அம்சங்கள் (vivo T5 Specifications): 6.83-இன்ச் 1.5கே 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே உடன் விவோ டி5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ (MediaTek Dimensity 7500 Turbo) சிப்செட் உடன் விவோ டி5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
50எம்பி சோனி மெயின் கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் விவோ டி5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளியாகும்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ டி5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் விவோ டி5 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் விவோ டி5 போனில் உள்ளன. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

7000எம்ஏஎச் பேட்டரி அல்லது 7050எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ டி5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ டி5 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ரூ.30,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications