Home
Mobile

செப்.2 குறிச்சாச்சு.. 3D டிஸ்பிளே.. 7.99 மி.மீ பாடி.. 7050mAh பேட்டரி.. புது Vivo ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்ட மாடலாக களமிறங்க இருக்கும் விவோ டி5 5ஜி (Vivo T5 5G) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 7.99 மி.மீ பாடியில் ஸ்லிம் லுக் கொடுக்க இருக்கிறது. IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. இந்த விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

வருகிற செப்டம்பர் 2ஆம் தேதியன்று இந்த விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கிடைக்க இருப்பதால், மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, சிப்செட், டிஸ்பிளே, டிசைன் மற்றும் கலர் உள்ளிட்ட பீச்சர்கள் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரையில் உறுதியான பீச்சர்களை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

செப்.2 குறிச்சாச்சு.. 3D டிஸ்பிளே.. 7.99 மி.மீ பாடி.. 7050mAh பேட்டரி!

விவோ டி5 5ஜி அம்சங்கள் (Vivo T5 5G Specifications): 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. மேலும், எச்டிஆர்10+ (HDR10+), 2000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் 449 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட இருக்கிறது. பிரீமியம் டிஸ்பிளே அனுபவம் கிடைக்கும்.

மேலும், எஸ்ஜிஎஸ் லோவ் ப்ளூ லைட் (SGS Low Blue Light), எஸ்ஜிஎஸ் ஃபிளிக்கர் (SGS Flicker) மற்றும் எஸ்ஜிஎஸ் ஃபைவ்-ஸ்டார் சன்லைட் உள்ளிட்ட டிஸ்பிளே சர்டிபிகேஷன்களை இந்த விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ (MediaTek Dimensity 7500 Turbo) சிப்செட் கிடைக்க இருக்கிறது. ஸ்லிம் மாடலாக இருக்கிறது.

7.99 மி.மீ பாடியில் 7050mAh பேட்டரியை கொடுக்க இருக்கிறது. 1.2 நாட்களுக்கு ஒரு சார்ஜிங் சைக்கிள் வீதம் 1,600 சார்ஜிங் சைக்கிள் வரையில் சென்றாலும், அதற்கு பிறகும் 80 சதவீத சார்ஜிங் ஹெல்த் அப்படியே இருக்கும். 5 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 60 FPS கேமிங் அவுட்புட்டில் 7.9 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

22 மணி நேரங்களுக்கு யூடியூப் ஸ்ட்ரீமிங் கிடைக்கும். ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist), ஏஐ கிரியேஷன் (AI Creation) உள்ளிட்ட பீச்சர்களை இந்த விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. IP69 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வாட்டர் ஜெட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கும்.

இதுபோக எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் சர்டிபிகேஷன் கொடுத்துள்ளது. இதில் ஹை-டெம்ப்ரேச்சர், லோவ் டெம்ப்ரேச்சர், சாண்ட் மற்றும் டஸ்ட் உள்ளிட்ட ரெசிஸ்டன்ஸ் கிடைக்கும். மீடியாடெக் என்பியூ 850 (MediaTek NPU 850) கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பீச்சர்களை விவோ நிறுவனமே உறுதி செய்துள்ளது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.

அந்த வகையில், இந்த விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போனில் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. ரூ.34,999 முதல் ரூ.49,999 பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo T5 5G With MediaTek Dimensity 7500 Turbo Launching on September 2 in India Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X