Home
Mobile

Vivo வெச்சான் பாரு.. ரூ.3500 டிஸ்கவுண்ட்.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 7050mAh சார்ஜிங்.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்ட மாடலாக வெளியாகிய விவோ டி5 (Vivo T5) ஸ்மார்ட்போனின் விற்பனை இப்போது தொடங்கி இருக்கிறது. ஆரம்பமே ரூ.3,500 தள்ளுபடியுடன் கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. 7050mAh பேட்டரி, 44W சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999 ஆகவும் இருக்கிறது. ரூ.3,500 தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது.

Vivo வெச்சான் பாரு.. ரூ.3500 டிஸ்கவுண்ட்.. 3D கர்வ்ட் டிஸ்பிளே!

விவோ டி5 அம்சங்கள் (Vivo T5 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7500 Turbo 4nm) சிப்செட்டை இந்த விவோ டி5 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 4 ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் ஆரா லைட் கொடுக்கப்பட்டு உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா கொண்ட மாடலாக இந்த விவோ டி5 கிடைக்கிறது.

4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பொக்கெ ஃபிளார், ஏஐ எரைஸ் 2.0 உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. 44W ஃபிளாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7050mAh பேட்டரியை இந்த விவோ டி5 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. 30 நிமிடங்களில் 44 சதவீத சார்ஜிங் செய்து கொள்ளலாம். 1600 சார்ஜிங் சைக்கிள்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் கிடைக்கும்.

பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) உள்ளிட்ட பீச்சர்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்பிடிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, பிரீமியம் குவாலிட்டி கிடைக்கும்.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7.99 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6.83 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மட்டுல்லாமல், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10+ (HDR10+) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6 கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4 கொடுக்கப்பட்டு உள்ளது. ஜிபிஎஸ் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo T5 5G With 8GB RAM Available At Rs 3500 Discount on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X