Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புது விவோ 5ஜி போன்.. 7050எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் சமீபத்தில் விவோ டி5 5ஜி (vivo T5 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய விவோ போன் நாளை முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் நாளை மதியம் 12 மணி அளவில் இந்த விவோ டி5 5ஜி போனை வாங்க முடியும். இப்போது விவோ டி5 5ஜி மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ டி5 5ஜி அம்சங்கள் (vivo T5 5G Specifications): 6.83-இன்ச் 1.5கே 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே உடன் விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 2800 × 1260 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

நாளை விற்பனைக்கு வரும் புது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ 4என்எம் பிராசஸர் உடன் விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய விவோ போனில் உள்ளது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ரியர் கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போனில் ஆரா லைட் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த விவோ 5ஜி போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ) உடன் விவோ டி5 5ஜி போன் வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo), புளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

7050எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 199 கிராம் ஆகும். ராயல் ப்ரோன்ஸ் (Royal Bronze) மற்றும் சில்வர் கிரீன் (Silver Green) கலர்களில் விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

நாளை விற்பனைக்கு வரும் புது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ டி5 5ஜி விலை
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி5 5ஜி மாடலின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி5 5ஜி மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ டி5 5ஜி மாடலின் விலை ரூ.44,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ டி5 5ஜி மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.

அறிமுக சலுகையாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இதன் பேசிக் வேரியண்ட்டை ரூ.3,500 தள்ளுபடியில் வாங்கி கொள்ளலாம். ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.31,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மற்ற மாடல்களுக்கு ரூ.4,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
vivo T5 5G will go on sale for first time tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X