Home
Mobile

பட்ஜெட் வாசிகள் ஹேப்பி.. 7200mAh பேட்டரி, 44W சார்ஜிங், 16GB ரேம், IP69 உடன் புது VIVO போன்.. எந்த மாடல்?

விவோ (Vivo) நிறுவனம், அதன் விவோ டி5 சீரீஸின் கீழ் விவோ டி5 ப்ரோ 5ஜி மற்றும் விவோ டி4எக்ஸ் 5ஜி ஆகிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோ சந்தையில் விவோ டி5 என்ற புதிய பட்ஜெட்-விலை 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் இது இந்திய சந்தையிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் 4ஜி ஸ்மார்ட்போன் ஆக இருந்தாலும் இது அதிக விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் காணப்படும் பிக் பேட்டரி, ஹை ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே மற்றும் நீடித்து உழைக்கும் வடிவமைப்பு (Durable design) ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

7200mAh பேட்டரி, 44W சார்ஜிங், 16GB ரேம், IP69 உடன் புது VIVO போன்!

விவோ டி5 4ஜி (VIVO T5 4G) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 1570×720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 1250 நிட்ஸ் எச்பிஎம் வரையிலான ப்ரைட்னஸ்
- 6.75-இன்ச் எல்சிடி டிஸ்பிளே

- ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 2 4ஜி சிப்செட்
- 8ஜிபி LPDDR4X ரேம்
- 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ்
- 8ஜிபி வரை நீட்டிக்கப்பட்ட ரேம் ஆதரவு

- 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 7200mAh பேட்டரி
- 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்

- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆர்ஜின் ஓஎஸ் 6
- பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- டூயல் சிம் 4ஜி கனெக்டிவிட்டி
- ப்ளூடூத் 5.1
- டூயல்-பேண்ட் வைஃபை
- யுஎஸ்பி டைப்-சி
- இன்ஃப்ராரெட் பிளாஸ்டர்

விவோ டி5 4ஜி ஸ்மார்ட்போனின் விலை: மெக்சிகோவில் விவோ டி5 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது கோல்ட் மற்றும் பிளாக் ஆகிய 2கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போன் ஒரேயொரு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் கீழ் மட்டும் வருகிறது.

இந்திய ருபாய் மதிப்பின்படி இது ரூ.32,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு வந்தால், இது மிக மிக மலிவான விலைக்கு தான் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் முன்னதாக இந்தியாவில் அறிமுகமான விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையே ரூ.29,999 தான்.

விவோ தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை சில டிப்ஸ்டர்கள் இந்த போன் இந்தியாவில் விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போன் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறுகின்றனர். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த 2025 டிசம்பர் மாத தொடக்கத்தில் விவோ எக்ஸ்300 ப்ரோ மாடலுடன் சேர்த்து இந்தியாவில் அறிமுகமானது.

ஆனால் விவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்கள் ஆனது - இந்த போன் குறைந்த அளவிலோ அல்லது கிடைக்காமலோ இருப்பதாக காட்டுகிறது. சுவாரஸ்யமாக, இந்த மாத தொடக்கத்தில் தான் விவோ எக்ஸ்X300 எப்இ (VIVO X 300 FE) மாடல் இந்தியாவில் அறிமுகமானது. இதுவே எக்ஸ்300 மாடலின் "இந்த நிலைக்கு" காரணமாக இருக்கலாம்.

விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்: வாங்க கிடைக்கும் இடங்களில் / தளங்களில் விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.75,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.81,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.85,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo T5 4G With 7200mAh Battery IP69 Rating Launched Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X