இந்தியாவுக்கு வரும் புது Vivo 5ஜி போன்.. Dimensity சிப்செட்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
விவோ (Vivo) நிறுவனம் விரைவில் விவோ வி50 (Vivo V50) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் பிப்ரவரி 17-ம் தேதி இந்த விவோ வி50 போன் அறிமுகம் செய்யப்படும். இதுதவிர இன்னொரு அசத்தலான ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது வரும் மார்ச் மாதம் விவோ டி4எக்ஸ் 5ஜி (vivo T4x 5G) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். குறிப்பாக இந்த புதிய விவோ டி4எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது கம்மி விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் இந்த புதிய விவோ போனின் சில அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ டி4எக்ஸ் அம்சங்கள் (vivo T4x Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (MediaTek Dimensity 7300) சிப்செட் வசதியுடன் விவோ டி4எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம வழங்கும். அதேபோல் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 6500mAh பேட்டரி உடன் இந்த அட்டகாசமான விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ப்ரோன்டோ பர்பிள் (Pronto Purple) மற்றும் மரைன் ப்ளூ (Marine Blue) நிறங்களில் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்படும். தற்போது இந்த விவோ போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனின் அனைத்து விவரங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே இந்நிறுவனம் அறிமுகம் செய்த விவோ டி3எக்ஸ் 5ஜி (vivo T3x 5G) போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ டி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T3x 5G Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது விவோ டி3எக்ஸ் 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ டி3எக்ஸ் 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். அதேபோல் இந்த போனில் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போன் வெளிவந்தது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) மூலம் இயங்குகிறது இந்த விவோ போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

6000mAh பேட்டரியுடன் விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது . எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த விவோ போன். தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி3எக்ஸ் 5ஜி போன் ரூ.12,999 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








