Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்கும் விற்பனை.. ரூ.13,000 ரேட்டுக்கு வந்த 6500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா!

பிளிப்கார்ட் பிளாக் பிரைடே விற்பனையில் (Flipkart Black Friday Sal) 6500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி64 ரேட்டிங் கொண்டுள்ள விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த விவோ ஸ்மார்ட்போன் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பிளிப்கார்ட் பிளாக் பிரைடே விற்பனை தொடங்விட்டது. பிளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 23ஆம் தேதியே இந்த விற்பனை தொடங்கிவிட்டது. வருகிற நவம்பர் 28ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. இதில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களில் விவோ டி4எக்ஸ் 5ஜி பட்ஜெட்டில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்கும் விற்பனை.. ரூ.13,000 ரேட்டுக்கு வந்த 6500mAh!

பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டானது, 19 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.14,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையிலும் கூடுதலாக ரூ.1,200 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.13,299 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடிகிறது. கிரெடிட் கார்டு வழியாக வாங்கினால், டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும்.

ஓரளவுக்கு பிரீமியம் லுக் கொடுக்கும்படி ப்ரோன்டோ பர்பிள் (Pronto Purple), மரைன் ப்ளூ (Marine Blue), கிளாசியல் டீல் (Glacial Teal) ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்கி கொள்ளலாம். பெரிய பேட்டரி மாடலாக இருந்தும், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை கொடுத்து இருக்கிறது. ஐபி64 ரேட்டிங்குடன் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

விவோ டி4எக்ஸ் 5ஜி முக்கிய அம்சங்கள் (Vivo T4x 5G Specifications): 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+) ரெசொலூஷனுடன் 6.72 இன்ச் (2408 x 1080) டிஸ்பிளே வருகிறது. இந்த எல்சிடி (LCD) டிஸ்பிளேவுக்கு 393 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்படுகிறது. மேலும், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பெற்ற கொள்ளலாம். டூயல் ரியர் கேமரா உள்ளது.

ஆகவே, 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 2 மெகாபிக்சல் பொக்கெ கேமராவும் கிடைக்கிறது. இந்த பிரைமரி கேமராவுக்கு டைனாமிக் லைட் சப்போர்ட் கிடைக்கிறது. இதில் 4K ரெசொலூஷனில் ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். சிங்கிள் கலர் டெம்ப்ரேச்சர் (Single Color Temperature), போர்ட்ராய்டு (Portrait), நைட் (Night) போன்ற கேமரா பீச்சர்களும் கிடைக்கின்றன.

ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Octa Core 4nm MediaTek Dimensity 7300) சிப்செட் கிடைக்கிறது. ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) கொடுக்கப்படும். 2 வருட அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கும். மேலும், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு பெறலாம்.

இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது, 8.19 எம்எம் தடிமன் மற்றும் 204 கிராம் எடை கொடுக்கும்படி 6500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, அதிக பேட்டரி கேபாசிட்டி மட்டுமல்லாமல், அதற்கு ஏற்ப 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சைடு-மவுண்டெட் செய்யப்பட்ட ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Fingerprint Sensor) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுத்து, கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. டைப்-சி ஆடியோ போர்ட் கொடுக்கப்படுகிறது. சிப்செட்டுக்கு ஏற்ப 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) மற்றும் வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4x 5G With 6GB RAM Sale Under Rs 13500 in Flipkart Black Friday Sale 2025 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X