Home
Mobile

மிரள விட்டாப்ல.. ரூ.15000 பட்ஜெட்ல் 6500mAh பேட்டரி.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. டைனாமிக் LED.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த விவோ பிரியர்களும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் குவியும்படி விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) போனின் டிசைன் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் 6500mAh பேட்டரி கொண்ட மலிவு விலை மாடலாக இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி களமிறங்க இருக்கிறது. இதனால் மார்கெட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்று இருக்கிறது. இந்த விவோ போன் எப்போது வெளியாகிறது? பீச்சர்களை எப்படி எதிர்பார்க்கலாம்? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளாம்.

இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போன் ஓரிரு வாரங்களில் வெளியாக இருக்கிறது. இதனால், விவோ நிறுவனம் அந்த போனின் பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. பேட்டரி மற்றும் பட்ஜெட் செக்மெண்ட் விவரங்கள் ஏற்கனவே வெளியாகின. இப்போது, டிசைன் மற்றும் கேமரா விவரங்கள் வெளியாகி இதற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மிரள விட்டாப்ல.. ரூ.15000 பட்ஜெட்ல் 6500mAh பேட்டரி.. 50MP கேமரா!

பிரீமியம் டிசைனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) மற்றும் டைனாமிக் எல்இடி (Dynamic LED) கிடைக்கிறது. ஏஐ பீச்சர்கள் வருவதை விவோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆகவே, கேமராவில் இந்த ஏஐ பீச்சர்களை எதிர்பார்க்கலாம். இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி பர்பிள் கலரில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே இப்போது வெளியாகின.

6500mAh பேட்டரி மற்றும் ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டன. ஆகவே, இந்த பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவை. இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்த்துவிடுவோம். இதில் டிஸ்பிளே, கேமரா, ரேம், சிப்செட் மற்றும் ஓஎஸ் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் அடங்கும்.

விவோ டி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T4x 5G Specifications): இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (Octa Core Dimensity 7300 SoC) சிப்செட் கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களுடன் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்க இருக்கிறது. 6.72 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

மேலும், பிளாட் டிசைனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 50 எம்பி கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் டைனாமிக் எல்இடி லைட் கிடைக்க இருக்கிறது. இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. இந்த 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், அந்த பேட்டரிக்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களில் மார்கெட்டுக்கு வர இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speaker) மற்றும் IP64 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்க வாய்ப்புள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 5ஜி கனெக்டிவிட்டி கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த வார இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் வெளியீட்டு விவரங்கள் தெரிந்துவிடும். அதேபோல ஓரிரு வாரங்களில் இந்திய மார்கெட்டில் களமிறங்கி விற்பனைக்கும் வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. பேட்டரி பேக்கப் அதிகமாக வேண்டும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த விவோ மாடல் பக்கா தேர்வாகும்.

Best Mobiles in India

English summary
Vivo T4x 5G With 6500mAh Battery Launch Soon India Under Rs 15000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X