Home
Mobile

மார்ச் 5 குறிச்சாச்சு.. வெறும் ரூ.12,999 போதும்.. 6500mAh பேட்டரி.. 50MP கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?

விவோ பிரியர்கள் எதிர்பார்த்த தேதியை குறிச்சாச்சு என்று சொல்லும்படி விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், டபுள் ட்ரீட் கொடுப்பது போல பட்ஜெட் செக்மெண்ட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி விவோ பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில் வெளியாகும் 6500mAh பேட்டரி மாடலாக இருப்பதால், மார்கெட்டில் தனி கவனம் பெற்றுள்ளது. இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போன் எப்போது வெளியாகிறது? பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்கள் எப்படி?

விவோ பிரியர்களுக்கு மற்றுமொரு பட்ஜெட் மாடலாக இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி வெளியாகிறது. மார்ச் 5ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று விவோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதோடு 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999 பட்ஜெட்டில் வெளியாக இருப்பதையும் உறுதி செய்துள்ளது. ஆகவே, இது அடிமட்ட விலை போனாக இருக்கப்போகிறது.

மார்ச் 5 குறிச்சாச்சு! வெறும் ரூ.12999 போதும்.. 6500mAh பேட்டரி மாடல்!

ஏனென்றால், இந்த போனில் 6500mAh பேட்டரி பேட்டரி வருவது முன்னதாகவே உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன்பு வெளியான விவோ டி3எக்ஸ் போனில் 6000mAh பேட்டரி வந்தது. இருப்பினும், ரூ.13,499 பட்ஜெட்டில் மார்கெட்டில் களமிறங்கியது. ஆனால், இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனானது, அதைவிட கூடுதலாக 6500mAh பேட்டரி பேக்கப் கொடுக்கிறது. அதே நேரத்தில் வெறும் ரூ.12,999 பட்ஜெட்டிலும் வருகிறது.

இதனால், கேமிங் பிரியர்கள் மற்றும் ஓடிடி பிரியர்கள் இந்த மாடலுக்கு வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். ஏற்கனவே, பிரீமியம் டிசைன் மற்றும் கேமரா பீச்சர்கள் வெளியாகின. இப்போது, விலை மற்றும் விற்பனை தேதி வெளியாகி இருக்கிறது. ஆகவே, இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியான பீச்சர்களையும், மார்கெட்டில் ஏற்கனவே கசிந்த பீச்சர்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 5 குறிச்சாச்சு! வெறும் ரூ.12999 போதும்.. 6500mAh பேட்டரி மாடல்!

விவோ டி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T4x 5G Specifications): இந்த விவோ போனில் 6500mAh பேட்டரி, டூயல் ரியர் கேமரா மற்றும் 2 கலர் ஆப்ஷன்கள் இருப்பதும், ரூ.12,999 பட்ஜெட்டில் வருவதும் அதிகாரப்பூர்வ தகவல்கள்களாக இருக்கின்றன. ஆனால், டிஸ்பிளே, சிப்செட், ஓஎஸ் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

இந்த விவோ போனில் 6.72 இன்ச் எல்டிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. எல்சிடி பேனலாக இருந்தாலும் டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது. லேட்டஸ்ட் மாடல்களில் வருவதை போலவே இதிலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வர இருக்கிறது. அதேபோல ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்க இருக்கிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியுடன் ஆக்டா கோர் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (Octa Core Dimensity 7300 SoC) சிப்செட் வர இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலும் வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோல 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் எதிர்பார்க்கலாம். இந்த விவோவில் 50 எம்பி கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

மேலும், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் இடம்பெற வாயப்புள்ளது. ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் எதிர்பார்க்க முடியாது. இந்த பீச்சர்களே மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த பீச்சர்களை விவோ நிறுவனமே அடுத்தடுத்து உறுதி செய்ய வாய்ப்புள்ளது. பட்ஜெட் பிரியர்களுக்கு இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி பக்கா ஆப்ஷனாகும்.

Best Mobiles in India

English summary
Vivo T4x 5G With 50MP Camera To Launch on March 5 Sale From Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X