Home
Mobile

மார்ச்.12 குறிச்சாச்சு.. வெறும் ரூ.12,999 போதும்.. 44W சார்ஜிங்.. 6500mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் இதுவரையில் வெளியாகாத பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) களமிறங்கி இருக்கிறது. பிரீமியம் போன்களில் கிடைக்கும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, ஏஐ டிரான்ஸ்லேஷன், சர்க்கிள் டூ சர்ச்ச், ஏஐ எரைசர், ஏஐ போட்டோ என்ஹான்ஸ் போன்ற பீச்சர்களை அடிமட்ட பட்ஜெட்டில் கொடுக்கிறது. இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ டி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T4x 5G Specifications): இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உள்ளது.

மார்ச்.12 குறிச்சாச்சு.. வெறும் ரூ.12,999 போதும்.. 44W சார்ஜிங் மாடல்!

ப்ரொன்டோ பர்பிள் (Pronto Purple), மரைன் ப்ளூ (Marine Blue) கலர்கள் உள்ளது. இந்த விவோவில் 6.72 இன்ச் (2408 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுபோக டியூவி ரெய்ன்லேண்ட் ஐ புரொடெக்டன் (TUV Rheinland Eye Protection) கிடைக்கிறது.

4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance), ஏஐ டாக்குமெண்ட் மோட் (AI Document Mode) மற்றும் நைட் மோட் (Night Mode) கிடைக்கிறது. IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.

இதுபோக MIL-STD-810H - மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military Grade Shock Resistance) கொடுக்கிறது. ஆகவே, இந்த அடிமட்ட பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் போன்களுக்கு நிகரான டியூரபிலிட்டி பெற்று கொள்ளலாம். இந்த விவோவில் 3 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது.

இதுபோக 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் கிடைக்க இருக்கின்றன. லைவ் டெக்ஸ்ட் (Live Text), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) மற்றும் ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் (AI Screen Translation) போன்ற பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் பீச்சர்கள் இந்த விவோ போனில் வருகிறது.

இந்த பட்ஜெட்டில் இதுவரையில் கிடைக்காதபடி 6500mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) உள்ளது. 2 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கான செக்யூகிரிட்டி அப்டேட்கள் உள்ளன.

இந்த விவோவின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது. ரூ.1000 டிஸ்கவுண்ட் போக மார்ச் 11ஆம் தேதி முதல் பிளாப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4x 5G With 50MP Camera Launched Sale From March 12 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X