சைலெண்ட்டா தூக்கிருங்க.. ரூ.12,824 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கும் மாடலாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா, IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் கொண்ட இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,999 ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.13,499 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.14,499 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது. இதுபோக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.675 தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.12,824 பட்ஜெட்டில் 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை வாங்கலாம்.

மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக உள்ளது. இப்போது, ரூ.14,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.725 பேங்க் தள்ளுபடி போக கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,774 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் ஈஎம்ஐ சலுகைகளும் கிடைக்கின்றன.
விவோ டி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T4x 5G Specifications): இந்த விவோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. மேலும், ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மற்றும் அந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. டைனாமிக் லைட் (Dynamic Light) மற்றும் 4K ரெக்கார்டிங் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.72 இன்ச் (2408 x 1080) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 393 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பெரிய 6500mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த பேட்டரி இருப்பதால், 8.19 எம்எம் தடிமன் வருகிறது. அதேபோல 204 கிராம் எடை கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டில் அதிக டியூரபிலிட்டி கொண்ட மாடலாகும் இது இருக்கிறது. ஏனென்றால், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. மேலும், டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்க IP64 ரேட்டிங் உள்ளது.
இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. ப்ரோன்டோ பர்பிள் (Pronto Purple) மற்றும் மரைன் ப்ளூ (Marine Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இன்-டிஸ்பிளே சென்சார் கிடையாது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமே கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








