பிளிப்கார்ட் பிச்சிக்கும்.. ரூ.15000 பட்ஜெட்.. 6500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் போன்களுக்கு பஞ்சமில்லை. சாம்சங், விவோ, ரியல்மி போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்து ரூ.15000 பட்ஜெட்டுக்குள் புதுப்புது மாடல்களை களமிறக்கி வருகின்றன. இப்போது, விவோ நிறுவனம் அடுத்த பட்ஜெட் மாடலுக்கு ரெடியாகிவிட்டது. சொல்லப்போனால், அடிமட்ட பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி கொண்ட மாடலை வெளியிட இருக்கிறது. இப்போது, அதன் கேமரா பீச்சர்கள் கசிந்துள்ளன. அது எந்த போன்? பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் விற்பனை என்ன? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) மாடலையே விவோ நிறுவனம் அடுத்து களமிறக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் பெரிய பேட்டரி சிஸ்டம் கொண்ட மாடலாக இது இருக்கும் என்பதையும் விவோ நிறுவனம் உறுதி செய்து இருக்கிறது. ஆனால், பீச்சர்கள் வெளியாகவில்லை.

ஆனால், மார்கெட்டில் டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி மற்றும் கேமரா பீச்சர்கள் ஏற்கனவே கசிந்துவிட்டன. இதனால், அடுத்த வாரம் அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனின் வெளியீடு இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் லேட்டஸ்ட்டாக கசிந்த கேமரா பீச்சர்களை பார்ப்போம். இந்த விவோவில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது.
ஆகவே, ஏஐ பீச்சர்களுடன் 50 எம்பி கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களை பார்க்கையில் ஏஐ எரைசர், ஏஐ என்ஹான்ஸ் போன்றவை இடம்பெற வாய்ப்புள்ளது. அதேபோல ஏற்கனவே வெளியான விவோ டி3எக்ஸ் 5ஜி போனில் கிடைத்த பொக்கெ ஃபிளார் போர்ட்ராய்டு, சூப்பர் நைட் மோட், 4K வீடியோ ரெக்கார்டிங் பீச்சர்கள் இதிலும் கிடைக்க வாய்ப்புள்ளது.
விவோ டி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T4x 5G Specifications): இந்த விவோ போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.68 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது. ரூ.15000 பட்ஜெட்டுக்கு ஏற்ப டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (Dimensity 7300 SoC) கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆரம்ப விலைக்கு அதாவது ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனில் 6500mAh பேட்டரி வருவது கிட்டத்தட்ட உறுதி போலத்தான். அதற்கு காரணம் இருக்கிறது.
ஏனென்றால், முன்னதாக வெளியான விவோ டி3எக்ஸ் 5ஜி போனிலேயே 6000mAh பேட்டரி வந்தது. ஆகவே, இதில் அதைவிட அதிகமான கேபாசிட்டி கொண்ட பேட்டரி மட்டுமே கிடைப்பது உறுதிதான். இந்த பேட்டரிக்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. பெரிய பேட்டரி கிடைத்தாலே அது கேமிங் பிரியர்களுக்கான மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதனால், இந்த போனில் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கிடைக்க இருக்கிறது. மேலும், 4D கேமிங் வைப்ரேஷன், கேம் மோட் போன்ற பீச்சர்களையும் எதிர்பார்க்கலாம். இதுபோக, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speaker) கிடைக்கின்றன. IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேற்கண்ட பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. அடுத்த சில நாட்களில் அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வரலாம்.
Image: Vivo T3x 5G


Click it and Unblock the Notifications








