மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. வருகிறது இரண்டு புதிய Vivo போன்கள்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் விரைவில் விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) மற்றும் விவோ ஒய்59 5ஜி (Vivo Y59 5G) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தற்போது BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளன. எனவே கூடிய விரைவில் இந்த போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக BIS சான்றிதழ் தளத்தில் V2437 மற்றும் V2443 மாடல் நம்பர்களில் விவோ டி4எக்ஸ் 5ஜி மற்றும் விவோ ஒய்59 5ஜி போன்கள் காணப்பட்டன. மேலும் இந்த இரண்டு போன்களும் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த புதிய விவோ போன்களின் விவரக்குறிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த போன்களின் விவரக்குறிப்புகள் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டவிவோ டி3எக்ஸ் 5ஜி (vivo T3x 5G) போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ டி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T3x 5G Specifications): ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) மூலம் இயங்குகிறது இந்த அட்டகாசமான விவோ போன்.
அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே வசதியுடன் விவோ டி3எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன்.பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.
4ஜிபி/6ஜிபி/86ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. குறிப்பாக தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் 5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த போன். தற்போது இந்த போன் ரூ.12,999 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








