Vivo கொடுத்த புதிய சர்ப்ரைஸ்.. 6500mAh பேட்டரி.. கம்மி விலை.. வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி50 (Vivo V50) ஸ்மார்ட்போனை வரும் பிப்ரவரி 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் மற்றொரு அசத்தலான ஸ்மார்ட்போனை ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம். அதாவது விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) எனும் ஸ்மார்ட்போனை தான் இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, வரும் மார்ச் மாதம் விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய விவோ போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனின் அம்சங்களை பார்க்கலாம்.

விவோ டி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T4x 5G Specifications): 6500mAh பேட்டரி உடன் இந்த அட்டகாசமான விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
குறிப்பான ப்ரோன்டோ பர்பிள் (Pronto Purple) மற்றும் மரைன் ப்ளூ (Marine Blue) நிறங்களில் இந்த அட்டகாசமான விவோ டி4எக்ஸ் 5ஜி போன் வெளிவரும். மேலும் ஸ்னாப்டிரகன் சிப்செட், டூயல் ரியர் கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போன் கம்மி விலையில் அறிமுகமாகும். தற்போது விவோ டி4எக்ஸ் 5ஜி போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே வெளியான விவோ 50 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (ZEISS Camera System) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ வி50. மேலும் இதன் மெயின் கேமராவில் விவோ நிறுவனத்தின் கேமரா பயோனிக் ஸ்பெக்ட்ரம் (Camera-Bionic Spectrum) சப்போர்ட் கிடைக்கிறது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன்.
ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் இந்த விவோ வி50 போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.
இந்த புதிய விவோ வி50 ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
6000mAh பேட்டரி உடன் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ வி50 போனில் உள்ளன. மேலும் இந்த விவோ வி50 போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








