ரூ.15,000 க்கு 6500mAh பேட்டரி, 5ஜி.. இந்த புது VIVO ஸ்மார்ட்போனை போட்டி போட்டு வாங்க போறாங்க!
விவோ (Vivo) நிறுவனம் இந்திய சந்தையில், பேக் டூ பேக் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்களை செய்கிறது. விவோ அதன் புதிய விவோ வி50 5ஜி (Vivo V50 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது இதற்கிடையில் விவோ நிறுவனமானது 2025 ஆம் ஆண்டின் முதல் டி-சீரிஸ் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை டீஸ் செய்ய தொடங்கி உள்ளது.
அது விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) ஸ்மார்ட்போனாகும். இது 6500எம்ஏஎச் பேட்டரி உடன் வருவதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் உள்ள விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட் ஆனது இது "விரைவில் வருகிறது" என்று கூறுகிறது. அதாவது இது இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம். சில லீக்ஸ் தகவல்கள் இது வருகிற பிப்ரவரி 20 அன்று அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறுகின்றன.

சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமும் (Vivo T4x 5G Price Range in India) வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வருமென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த விலைப்பிரிவில் மிகப்பெரிய பேட்டரியை கொண்ட ஸ்மார்ட்போன் ஆக விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 7300 சிப்செட்டை (Dimensity 7300 Chipset) கொண்டிருக்கும். நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு வெளியான விவோ டி3எக்ஸ் (Vivo T3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்டை கொண்டுள்ளது.
இதுதவிர விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது விவோ ஒய்58 (Vivo Y58) ஸ்மார்ட்போனில் நாம் கண்ட நோட்டிஃபிகேஷன் எல்இடி டைனமிக் லைட்டை (Notification LED Dyanmic Light) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோவின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ப்ரோன்டோ பர்பில் மற்றும் மரைன் ப்ளூ என்கிற 2 கலர்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் குறித்து வேறு எந்த தகவல்களும் இல்லை.
விவோ டி3எக்ஸ் 5ஜி-யின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ-சிம்) ஆதரவுடன் வரும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 மூலம் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் எஃப்எச்டி எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை இது 4என்எம் அடிப்படையிலான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்டென்டட் ரேம் 3.0 அம்சத்தின்கீழ் பில்ட்-இன் ரேம்-ஐ மேலும் 8ஜிபி வரை விரிவாக்க முடியும். மறுகையில் உள்ள இன்டர்னல் ஸ்டோரேஜை, மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்f/1.8 அபெக்ஷர் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + எப்/2.4 அபெக்ஷர் கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, முன்பக்கத்தில் எப்/2.05 அபெர்க்ஷர் உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 68 மணிநேரம் வரையிலான ஆன்லைன் மியூசிக் பிளேபேக் டைம்-ஐ வழங்கும்.


Click it and Unblock the Notifications








