சும்மா பிச்சிக்குது சேல்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5700mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களை தட்டித்தூக்கும்படி விவோ டி4ஆர் (Vivo T4R) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, 5700mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், அண்டர் வாட்டர் போட்டோகிராபி போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டுக்கு 10 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.20,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.18,999 பட்ஜெட்டில் இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இப்போது பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ டி4ஆர் அம்சங்கள் (Vivo T4R Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட்டை இந்த விவோ டி4ஆர் கொண்டுள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொடுக்கப்பட்டு உள்ளது.
6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. குவாட் கர்வ்ட் டிசைனில் (Quad Curved Design) ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொடுத்து உள்ளது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஸ்காட் எக்ஸ்என்சேஷன் கிளாஸ் (SCHOTT Xensation Glass) பாதுகாப்பு கொண்டுள்ளது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி பொக்கெ கேமராவை இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. ஹைபிரிட் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Hybrid Image Stabilization) வருகிறது. ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) உள்ளது.
மேலும், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. மெயின் கேமரா மட்டுமல்லாமல், போக்கெ கேமராவுக்கு கேலக்ஸிகோர் ஜிசி02எம்1 (Galaxycore GC02M1) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 32 எம்பி செல்பீ கேமராவை இந்த விவோ டி4ஆர் கொடுத்துள்ளது. ஏஐ பேசியல் கன்டோவ்ரிங் டெக்னாலஜி (AI Facial Contouring Technology) உள்ளது.
மேலும், ஸ்டூடியோ ஆரா லைட் (Studio Aura Light), ஏஐ இமேஜ் ஸ்டூடியோ (AI Image Studio) மற்றும் ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance) கொடுக்கப்பட்டு உள்ளது. மல்டிபோகல் போர்ட்ராய்டு (Multifocal Portrait), லைவ் போட்டோ (Live Photo), சூப்பர் நைட் மோட் (Super Night Mode) மற்றும் அண்டர் வாட்டர் போட்டோகிராபி (Underwater Photography) போன்ற பீச்சர்களை கொடுத்துள்ளது.
இந்த அண்டர் வாட்டர் போட்டோகிராபி கொடுக்க IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மேலும், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) டியூரபிலிட்டியை இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5700mAh பேட்டரியை கொடுத்து உள்ளது. 7.39 எம்எம் தடிமன் மற்றும் 183 கிராம் எடை உள்ளது.


Click it and Unblock the Notifications








